1. பாலரே ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே; உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும், இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே; ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ? அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டில் நீர் நல் மீட்பரின் பேரன்பால் பொற் கிரீடம் அணிவீர்; இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார், இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார். 4. பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே; மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே; அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை, நீர் அவரிடம் வாரும், ஈவார் அவ்வின்பத்தை.